தனபால் மேல்நிலைப்பள்ளியின் 46 ஆவது விளையாட்டு விழா.

மதுரை
13-11-2025

மதுரை பிபி குளம் முல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள தனபால் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு குழந்தை தொழிலாளர் பாலியல் வன்கொடுமை சமுதாய சீர்கேடு உள்ளிட்டவைகளை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் முல்லை நகர் பி பி குளம் கிருஷ்ணாபுரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பேரணையாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.அதனைத் தொடர்ந்து முதல் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளியின் 46 ஆவது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும் மேலாளருமான தனபால்ஜெயராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.

தலைமையாசிரியர் தினேஷ்சேவியர் முன்னிலை வைத்தார். தொடர்ந்து ஓட்டப்பந்தயம் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்பாபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்வில் ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

*பாலகிருஷ்ணன்
மதுரை மாவட்ட செய்தியாளர்*