திமுக செயலாளர் தலைமையில் BLA 2,BDA வாக்காளர் திருத்தம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது !

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பிஆர் மகாலிலும் . நாங்குநேரி செங்குளம் அழகு மஹாலிலும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் திரு M.கிரகாம்பெல் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக இராதாபுரம் மற்றும் நாங்குநேரிசட்டமன்ற தொகுதி BLA 2,BDA, மற்றும்சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் திரு K.S.ரவீந்திரன், திமுக சட்டத்துறை துணை செயலாளர்திரு ராஜா முகமது. தலைமை கழக வழக்கறிஞர் திரு S.S.மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR)குறித்து சிறப்புரை யாற்றினார்கள்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக முக்கிய பிரமுகர்கள். மாவட்ட கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள்உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.