“தமிழக ஆளுநர் கோட்சேவின் பார்வையில் உள்ளார்”; சபாநாயகர் அப்பாவு

திரு­நெல்­வேலி: “தமி­ழக ஆளு­நர் கோட்சேவின் பார்­வை­யில் உள்­ளார்.தொடர்ந்து இந்­திய அர­சி­யல் அமைப்பு சட்­டத்­துக்கு எதி­ராக பேசிவரு­கி­றார். ஆளு­நர் இந்­திய அர­சி­யல் அமைப்­புச்சட்­டப் பிரிவு 15 மற்­றும் 17ஐ படித்­து­விட்டு பேச வேண்­டும்.” என சபா­நா­ய­கர் அப்­பாவு தெரி­வித்­துள்­ளார்.நெல்லை மாவட்­டம் ராதா­பு­ரம் கால்­வா­யில் ஆண்­டு­தோ­றும் ஜூன் 15ம் தேதி பாச­னத்­துக்­காக தண்­ணீர் திறப்­பது வழக்­கம்.கடந்­தாண்டு ஏற்­பட்ட பெரு­வெள்­ளத்­தின் கார­ண­மாக, தோவாளை கால்­வா­யில் உடைப்பு ஏற்­பட்­ட­தால் அவை சரிசெய்­யப்­பட்டு நேற்று(செப்.25) தோவாளை கால்­வாய் நிலப்­பாறை என்ற இடத்­தி­லி­ருந்து ராதா­பு­ரம் கால்­வாய்க்கு தண்­ணீர் திறந்­து­வி­டப்­பட்­டது.இதன்­படி, தின­சரி 150 கன அடி வீதம் 138 நாட்­க­ளுக்கு தண்­ணீர் திறந்து விட அர­சாணை வெளி­யி­டப்­பட்டு அதன்­படி இன்று தண்­ணீர் திறக்­கப்­பட்­டது.இதன் மூலம் ராதா­பு­ரம் தாலு­கா­வில் உள்ள 52 குளங்­கள் மூலம் 17 ஆயி­ரம் ஏக்­கர் பாசன வசதி பெறும். மேலும், ராதா­பு­ரம் கால்­வாய் செல்­லும் சுமார் நூற்­றுக்­க­ணக்­கான கிராம பகு­தி­க­ளில் குடி­நீர் ஆதா­ர­மா­க­வும் இந்த ராதாபு­ரம் கால்­வாய் இருந்து வரு­கி­றது. ராதா­பு­ரம் கால்­வா­யில் சபா­நா­ய­கர் அப்­பாவு மற்­றும் நெல்லை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராபர்ட் ப்ரூஸ் ஆகி­யோர் தண்­ணீரை திறந்து விட்­டனர்.அதன்­பின் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த சபா­நா­ய­கர் அப்­பாவு, “ராதா­பு­ரம் கால்­வாய் பாச­னத்­தில் உள்ள 52குளங்­க­ளும் நிரப்­பப்­ப­டும் இதற்­காக அதன்மடை­களை கண்­கா­ணிக்­கவும் சீராக தண்­ணீர் திறந்துவிட­வும் ஐந்து லஸ்­கர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்,”என்­றார்.மதச்­சார்­பின்மை ஐரோப்­பா­வில் உரு­வான சித்­தாந்­தம் என­வும் பார­தம், இந்து தர்­மம் இரண்­டை­யும் பிரிக்க முடி­யாது என்­றும் பார­தம் இந்து தர்­மத்­தின் அடிப்­படை­யில் செயல்­ப­டு­வ­தால் மதச்­சார்­பின்மை இங்கு தேவை இல்லை என ஆளு­நர் கூறி­யது குறித்து செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­தற்கு பதி­லளித்த அப்­பாவு, “இந்­தியா என்­பது ஒரு மதச்­சார் ­பற்றநாடு. இங்கு சாதி மதம்,பிறப்பு அடிப்­படை­யில் எந்த வேறு­பா­டும்காட்­டக்­கூ­டாது என்­பதையே நமது இந்­திய அர­சி­ய­லமைப்பு சட்­டப்பிரிவு 15 மற்­றும்17 கூறு­கி­றது.ஆளு­நர் கோட்சேவின் பார்­வை­யில் உள்­ளார்.தொடர்ந்து இந்­திய அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்­துக்கு எதி­ராக பேசு­வதை அவர் நிறுத்­திக் கொள்ள வேண்­டும். குறிப்­பாக,இந்­திய அர­சி­ய­லமைப்­புச்சட்­டம் பிரிவு 15 மற்­றும்17ஐ படித்­து­விட்டு அவர்பேச வேண்­டும்.” எனத்தெரி­வித்­தார்.