24வதுசுற்றிற்கான பனைவிதைநடவுப்பணி
இன்று 2.11.25 ல் 24வது சுற்றிற்கான பனைவிதை நடவுப்பணி,வகைக்குளம் கிராமம், வாகைக்குளத்தின் கிழக்கு, தெற்கு கரைகளின் இருபக்கங்களிலும், மற்றும் குளத்தை ஒட்டிய சாலையின் கிழக்கு பகுதி, வடக்கிலிருந்து தெற்காக மொத்தம்1500 பனைவிதைகள் நடப்பட்டன.
கடந்த 4.9.25 ல் இந்த ஆண்டிற்கான பனைவிதைகள் நடும்பணி ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை தற்போதைய 24வது சுற்று முடிய 25914 பனைவிதைகள் அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, விக்கிரமசிங்கபுரம், கோட்ட விளப்பட்டி, சிவந்திபுரம், சிவசக்திநகர், அடையக் கருங்குளம், கோடாரங்குளம்,அகஸ்தியர்புரம், முதலியார்பட்டி,கொண்ட பையன் பட்டி, வடமலசமுத்திரம்,மன்னார்கோயில்,
காக்கநல்லூர், இருதயகுளம் வாகைக்குளம், பகுதியிலுள்ளகுளம், குட்டை, கால்வாய், சிறுஓடை, மறுகால் ஓடை, தாமிரபரணி நதிக்கரை ஓரங்கள் மற்றும் கிராம நகர சாலையின்ஓரங்களில் நடப்பட்டுள்ளன.சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டிற்கான இலக்கு 10000 பனைவிதைகள் நடவேண்டும் என தீர்மானித்திருந்தோம். இருப்பினும் நடப்பாண்டில் பனைமரங்களில் அதிக பனம்பழங்கள் காய்த்து கீழே விழுந்ததால் அதை சேகரித்து அதிகமாக நடுவதற்கு நல்ல வாய்பு கிடைத்தது. அதோடு நல்லோர்களின் உதவியாலும் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.இன்றையப் பணிகளுக்கான உதவிகளை அம்பாசமுத்திரம்
யோகீஸ் அறக்கட்டளையின்நிறுவனர் திரு.யோகீஸ்ராஜா அவர்கள் உதவி செய்தார்கள்.அவர்களுக்கு நன்றியைத்
தெரிவிக்கிறோம்.
*பணி* 2 :-
நடவுப்பணியை முடித்த கையோடு, பனம்பழங்களை விதைக்காக சேகரிக்கும் பணியினை மேற்கொண்டோம். 250 பனைவிதைகள் சேகரிகப்பட்டு அதை பக்குவப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.காரணம். பனை நடவு பருவக் காலம் முடிய சுமார் 23 நாட்களே உள்ளதால் விரைவாக சேகரித்து நட உத்தேசித்துள்ளோம். மற்றமரங்களை, விதைகளை எந்த காலத்திலும் நடலாம். ஆனால் பனைவிதைகளை அவணிபுரட்டாசி, ஐப்பசி , கார்த்திகை 8க்குள் மட்டுமே நட முடியும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் .அதற்குமேல் நட்டால் முழுமையாக வளராது என்பர்.
*பணி* 3 :-
விதைக்காக பனம்பழங்களை சேகரிக்கும்போது,பனமரங்களை ஓலைக்காக வெட்டிய கழிவு ஓலைகள், மட்டைகள் பனைமரங்களைச்சுற்றி கிடந்தன. இவைகள் காய்ந்த நிலையில் இருப்பதால், தீயினால் பாதிப்பு ஏற்பட்டு மரம் கறிகி போய்விட வாய்பு அதிகம். இதைக் கருத்தில் கொண்டு, பனைமரங்கைச்சுற்றி கிடந்த ஓலைகள், மட்டைகள் கழிவுகளை பனைகளைவிட்டு அகற்றி தனியே அப்புறப்படுத்தினோம்.இன்றையப் பணிகளை என்னுடன், மலை சுந்தரம், முருகன்,செல்வம், சந்தனக் குமார் ஆகியோர் மேற்கொண்டனர்.
கிரிக்கெட்மூர்த்தி
Asst. Director of Statistics (Rtd)
சுற்றுச்சூழல் ஆர்வலர்
விக்கிரமசிங்கபுரம்






