சென்னை: புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் தவெகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக தன்னைச் சந்திக்க வந்த புதுச்சேரி பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம், ரங்கசாமி இந்தத் தகவலைக் கூறி அவருக்கு ஷாக் கொடுத்து அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது. இதை கடந்த 14 ஆம் தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்த பின் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி கூட்டணி
பாஜக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரைக்காலில் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அவரை நேரில் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி தேர்தல் பணிகள் மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார். இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே என்.ஆர்.காங்கிரஸ் நீடிப்பதாக உறுதிபட தெரிவித்தார்.
என்ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரிக்கு பிரதமர் வருகை தந்தார். தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ரங்கசாமியை இன்று திலாசுப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தார்.






