உணவு, மருந்துகளுக்­கான ஜி.எஸ்.டி. வரி குறைகி­றது!

புது­டெல்லி, செப், 28 ஜி.எஸ்.டி. வரியில் மாற்­றம் கொண்டு வ­ருவது குறித்து, மந்தி­ரி­கள் குழுவினர் பங்­கேற்ற ஆலோசனைகூட்­டம் நேற்று முன்­தினம் நடந்­தது. அந்தகூட்­டத்தில் ஆலோசிக்­கப்­பட்ட விஷ­யங்­கள் குறித்து மேற்கு வங்­காள மாநில நிதி மந்திரி சந்­திரிமா பட்­டாச்­சார்­யா கூறிய­தாவது:சாமானிய மக்­களுக்கு பலன் கிடைக்கும் வகை­யில் ஜி.எஸ்.டி. வரி விகி­தத்தில் மாற்­றம் கொண்டு வருவது குறித்து கலந்­தா­லோசிக்­கப் பட்­டது. உணவு பொருட்களுக்கு விதிக்­கப்­ப­டும் 12 சதவீத ஜி.எஸ்.டி.வரியை 5 சத­வீ­த­மாக குறைப்­பது,சைக்கிள், மருந்து மற்­றும் மருத்துவ உப­க­ரணங்­கள் உள்ளிட்­டவற்றுக்­கான ஜி.எஸ்.டி.வரியை குறைப்­பது குறித்து கூட்­டத்தில்ஆலோசனை நடத்­தப்­பட்­டது.வரிகுறைக்­கப்­ப­டும் பட்சத்தில், ஜி.எஸ்.டி.வரி வருவாய் பாதிக்கப்­ப­டும். அதை ஈடு­கட்ட சில ­பொ­ரு ட்கள் மீதான வரியை உயர்த்­துவது குறித்தும் இந்தகூட்­டத்தில் ஆலோசித்­தோம். குறிப்பாக, அழகு சாத­னப்பொருட்­கள். குளிர்­பானங்­க­ளுக்கான ஜி.எஸ்.டி. வரியை உயர்த்த ஆலோ­சிக்கப்­பட்­டது.மக்களின் வரிச்­சு­மையை குறைக்க 100 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியில் மாற்­றம் கொண்டு வருவது குறித்து இந்த கூட்­டத்­தில் ஆலோசிக்­கப்பட்­டது. இவ்வாறு அவர் கூறினார்.   தற்போது மருத்துவ மற்றும் ஆயுள்கப்பீடு திட்­டங்­க­ளுக்கு 18 சத­வீத ஜி.எஸ்.டி. ற வசூலிக்கப்­படுகிறது. இதை  குறைக்கவேண்டும் என்று மத்­திய மந்திரி நிதின் கட்கரி சிலமாதங்­கக்கு முன்பு மத்   திய மந்திரி நிர்­மலா சீதா­ராமனுக்கு கடி­தம் எழுதினார்.இந்த நிலையில்,மருத்துவ மற்றும் ஆயுள் தொடர்­பான ஜி.எஸ். காப்­பீடுடி. வரியை குறைப்பது குறித்த முடிவு அடுத்த கூட்­டத்தில் எடுக்கப்­ப­டும் என்று எதிர்­ பார்க்­கப்படுகி­றது. அடுத்த அக்­டோபர் 19 ந்தேதி கூட்­டம் நடை­பெற உள்­ளது. இந்த கூட்­டத்தில் இறுதி பரிந்து­ரை­கள் உருவாக்­கப்­ப­டும். அவை  ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்­டத்தில் சமர்ப்பிக்­கப்­ப­டும்.  அடுத்த கூட்­டத்தில், தமிழ் நாடு,  கேரளா,  கர்­நா ­டகா, ஆந்திரா,தெலுங்­கானா,மேற்கு மேகாலயா, பஞ்சாப்,­ வங்­கா­ளம், குஜராத், பீகார் கோவா, உத்­தரபிர­தேசம். ராஜஸ்­தான் ஆகிய மாநிலங்­களை சேர்ந்த 13 மந்திரி­கள் பங்கு பெறுகிறார்­கள்.