மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் டார்க் சாக்லேட் மூலம் மார்பக சுயபரிசோதனைக்கான விழிப்புணர்வை அறிமுகப்படுத்தியுள்ளது

*மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் டார்க் சாக்லேட் மூலம் மார்பக சுயபரிசோதனைக்கான விழிப்புணர்வை அறிமுகப்படுத்தியுள்ளது*

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதில் பெண்களுக்கு மிகவும் பிடித்த சாக்லெட் கொண்டு, மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும், ‘செக் ஓலேட் எனும் விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட்டது.

மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் (ACES) ‘செக்-ஓலேட்’ என்ற டார்க் சாக்லேட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு விழிப்புணர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சியானது, ஒரு சாதாரண சாக்லேட் பெண்களுக்கு தங்களை பராமரிக்கும் நினைவூட்டலாக மாற்றுகிறது. அதன்படி, செக் ஓலேட் என்ற அந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சாக்லெட்கள் வழங்கப்படும். அதன் உறையை ஸ்கேன் செய்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான சுயபரிசோதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட உள்ளது.

மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சிகிச்சையில் நம்பிக்கையான ஓர் இடத்தை பெற்று வருகிறது. சிறப்பான மருத்துவ நிபுணர்களைக் கொண்டு, மிக துல்லியமான உயர்தர கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் 360 டிகிரி ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சையை அளித்து வருகிறது அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன், சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வருகிறது.

படி, இந்தியப் அப்போலோ மருத்துவமனை, மதுரை மண்டலத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். நிகில் திவாரி கூறியதாவது “GLOBOCAN இன் பெண்களிடையே புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்புக்கான முக்கியக் காரணமாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. இந்தியாவில் புதிதாக ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில், 13.5% சதவீதத்தினர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளில், 10.6% சதவீதத்திற்கு மார்பக புற்றுநோய் காரணமாகிறது. NCBI ஆய்வின்படி 30 முதல் 69 வயதுக்குட்பட்ட பெண்களில் வெறும் 1.6% பேர் மட்டுமே பரிசோதனை செய்துள்ளனர். அதிக விழிப்புணர்வு மற்றும் முன்கூட்டிய தடுப்பின் அவசரத் தேவையை உணர்ந்து, ‘செக்-ஓலேட்’ மூலம் சுய-கவனிப்பை இயல்பாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், பெண்கள் மார்பக க மாற்றவும், ஆரம்பத்திலேயே சுயபரிசோதனையை மாதாந்திர செயல்முறையாக மாற்றவும், தங்கள் ஆரோக்கியத்தைக் கவனிக்கவும் இது உதவுகிறது.”

K. பிரவின் மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் ராஜன்கூறியதாவது: “பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால், நாடு செழிக்கும்; அவர்களின் நல்வாழ்வு பொருளாதாரத்தை வலுப்படுத்தும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பட்சத்தில் 2040ஆம் ஆண்டிற்குள் உலகட் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு சுமார் ஒரு ட்ரில்லியன் டாலர்களைச் சேர்க்க பெண்களின் முடியும் 6T GOT மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோவில், ஆரோக்கியத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, ஆரம்பக் கண்டறிதலை மேம்படுத்துகிறோம். ‘செக்-ஒலேட்’ முயற்சியின் மூலம் மார்பகப் புற்றுநோலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தேவையான சிகிச்சையை பெறலாம்

மேலும் தென் தமிழகத்தில் முதன் முறையாக பெண்களுக்கு என விரிவான மார்பக நல சிகிச்சையை வழங்குவதற்காக பிரத்யேகமாக அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் உள்ளது. இந்த கிளினிக்கின் மூலம் லம் பெண்களின் மார்பகம் குறித்த ஆரோக்கியத்தையும் மற்றும் அதன் பிரச்சனைகளையும் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனை, மதுரை மண்டலத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். நிகில் திவாரி, மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் K. பிரவின் ராஜன், புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பி.கே. முத்துகுமாரசாமி, டாக்டர். ஜே. தேவானந்த், டாக்டர் டி தீனதயாளன், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். டி.கே. சர்ப்பராஜன், டாக்டர். கே. பாலு மகேந்திரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர், ஜே, ஜெபசிங், டாக்டர். ஜி. சதிஷ் ஸ்ரீனிவாசன், டாக்டர். ஆயிஷா ஃபாத்திமா, மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த மேலாளர் திரு.J. பிரேம் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.