அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 2,228 பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

சென்னை ஆக., 21:தமிழக அரசின் பல்­வேறு துறை பணியிடங்­களுக்கு தேர்­வா­ணையம் மூலம் தேர்வு செய்­யப்­பட்­ட­வர்­கள் மற்றும் பணிக்­கா­லத்தில் கால­மான பணியா­ளர்­க­ளின் வாரிசுதா­ரர்­கள் உட்­பட மொத்­தம் 2,228 பேருக்கு பணிநியமன ஆணை­களை முதல்­வர் ஸ்டாலின் நேற்று (ஆக.20) வழங்­கி­னார்.
அப்­போது துறை அமைச்­சர்­கள், அரசு அலு­வ­லர்கள் உடனிருந்­த­னர்.
தலை­மைச் செயலகத்­தில் நடந்த நிகழ்வில் இந்த பணிநியமன ஆணைகளை வழங்­கப்­பட்­டன.
நிதித்துறை : நிதித்துறையின் கட்­டுப்­பாட்­டில் செயல்­ப­டும் கருவூலக் கணக்குத் துறை­யில் தமிழ்­நாடு அரசுப்பணியா­ளர் தேர்­வா­ணை­யம் மூலம் கணக்­கர் பணி­யிடங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­பட்ட 537 நபர்­களுக்கும், கருவூலக் கணக்­குத் துறையில் பணிபு­ரிந்து பணிக்­கா­லத்தில் காலமான பணியா­ளர்­களின் 10 வாரிசுதா­ரர்­களுக்கு கருணை அடிப்­படை­யிலும், பணி நியமன ஆணைகள் வழங்­கிடும் அடையா­ளமாக 10நபர்களுக்கு பணி நியமனஆணைகளை முதல்­வர் ஸ்டாலின் வழங்­கி­னார்.
மருத்துவம் மற்றும் மக்­கள் நல்­வாழ்வுத் துறை: மருத்துவம் மற்றும் மக்­கள் நல்­வாழ்வுத் துறை சார்­பில் மருத்து­வப் பணி­யா­ளர் தேர்வு வாரியத்­தின் மூலமாக மருந்­தா­ளு­நர் பணியிடத்துக்கு தெரிவு செய்­யப்­பட்ட946 நபர்­கள்,தமிழ்­நாடு அரசுப்பணி­யாளர் தேர்­வா­ணையத்­தின் மூலமாக உதவியாளர் பணியிடத்துக்கு தெரிவு செய்­யப்­பட்ட 523 நபர்­கள் மற்றும் தொழில் வழிகாட்டி ஆலோ­ச­கர் பணியிடத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்ட 5 நபர்­கள், எனமொத்­தம்  1,474 நபர்­களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்­கி­டும் அடை­யா­ளமாக 7 நபர்­க­ளுக்கு பணி நிய­மனஆணைகளை முதல்­வர் வழங்கினார்.­இந்துசமய அற­நி­லையத்துறை: இந்து சமய அற­நி­லையத்து­றையின் அமைச்சுப்­
பணியில் உதவியா­ளர் பணியிடத்துக்கு தமிழ்­நாடு அரசுப் பணியா­ளர் தேர ்­வாணையத்­தால் தேர்வு செய்­யப்­ப ட்ட 172 நபர்­க­ளுக்கு பணிநியமன ஆணைகளை
வழங்­கிடும் அடை­யா­ள­மாக 10 நபர்­க­ளுக்கு பணிநியமன  ஆணைகளை
முதல்­வர் வழங்கி­னார்.
மீன­வர் நலத்துறை:தமிழ்­நாடு அரசுப் பணி­யா­ளர் தேர்­வாணையத்­தின் வாயிலாக   மீன்­வ­ளம் மற்றும் மீன­வர் நலத்து­றையில் 35 உதவியா­ளர் பணியிடங்­க­ளுக்கு
தெரிவு செய்­யப்­பட்ட நபர்­க­ளுக்கு பணி நிய­மன ஆணைகளை வழங்கிடும் அடை­யா­ளமாக,தமிழக முதல்­வர் 3 நபர்­களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்­கி­னார்.
இந்நி க ழ்வுகளின்போது,சம்­பந்­தப்­பட்டதுறையின் அமைச்­சர்­கள்,துறை செயலர்­கள் உள்­ளிட்ட அதிகா­ரிகள் உட­னிருந்தனர்