நெல்லையில் தொடர் மழை தாமிரபரணி வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு SDPI கட்சியின் மீட்பு பணிக்குழுவினர் ஆய்வு

நெல்லையில் தொடர் மழை தாமிரபரணி வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு SDPI கட்சியின் மீட்பு பணிக்குழுவினர் ஆய்வு

நெல்லையில் தொடர்மழையின் காரணமாக மாவட்டத்தின் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தாமிர பரணி ஆற்றால் வெள்ளப்பெருக்கு ஏற்ப்படும் சூழ்நிலை உள்ளது கடந்த 2023 ம் ஆண்டு தாமிர பரணி வெள்ளபெருக்கினால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், பஸ் நிலையம், கரையோரம் வசிக்கும் குடியிருப்பு பகுதி முழுவதும் பாதிக்கபட்டது பாதிக்கபட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து SDPI கட்சியினர் பல்வேறு உதவிகளை செய்து வந்தனர், தற்ப்பொழுது நெல்லையில் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் நீர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்ப்படும் அபாயம் உள்ளதாக தெரிய வருகிறதை அறிந்து இன்று SDPI கட்சியின் மழை வெள்ள மீட்பு பணிக்குழுவினர் கொக்கிரகுளம் ஆற்று பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இந்நிகழ்வில் SDP.கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கோட்டூர் பீர்மஸ்தான்,குறிச்சி குளம் அன்சாரி, சுத்தமல்லி அன்சாரி, ரஹமத்துல்லா. சேரை சிந்தா கொடி, பத்தமடை நகர செயலாளர் ஆதம், தீன். வீரவநல்லூர் மைதீன் சாகுல்ஹமீது தாழை சேக்மு ஹமது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்