திருக்கோயில்களில் 149 ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 98 திருக்கோயில் இருந்து வருகிறது.ஒரு கால பூஜை திட்டத்தின் அரசு வைப்பு நிதி திருக்கோயில் பெயரில் ரூ.2,50,000/- செலுத்தப்பட்டது!

கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டைஅருகே திருக்கோயில்களில் 149 ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 98 திருக்கோயில் இருந்து வருகிறது. இத்திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அரசு வைப்பு நிதி திருக்கோயில் பெயரில் ரூ.2,50,000/- செலுத்தப்பட்டு மாதந்தோறும் பூசாரிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000/- வரவு வைக்கப்பட்டு ஒருகால பூஜை திட்டம் நடைபெற்று வருகிறது.

மேற்படி திட்டத்தினை பொதுமக்களுக்கு தெரிவித்திடும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் அறிவிப்பு பலகை வைத்திடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி அறிவிப்பு பலகைகள் தேன்கனிக்கோட்டை ஆய்வாளர் அலுவலகத்தில் வழங்கிடும் பணி தேன்கனிக்கோட்டை ஆய்வாளர் ப.வேல்ராஜ் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.