கவின் ஆணவ படு கொலையை கண்டித்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது!

திருச்சி மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருநெல்வேலி கவின் ஆணவ படு கொலை கண்டித்து தில்லை நகர் 7வது வளைவு பகுதியில்இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

படுகொலைக்கு துணை போன சுஜித் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்கைது செய்ய வலியுறுத்தியும்,
உடனடியாக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும்,
கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தியும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது,

இந்த நிகழ்வில் தில்லை நகர் பகுதி செயலாளர் தில்லை முரசுதலைமை வகித்தார் மேலும் இந்த நிகழ்வில் மாநில தொண்டர் அணிசெயலாளர் ஏர்போர்ட் மு.பெரிய சாமி,மகளிர் அணி மாநில செயலா ளர் சுதா பெரியசாமி,மகளிர் அணி மாவட்ட செயலாளர்கஸ்தூரி, மனிதநேய ஜனநாயககட்சி மாநில இளைஞர் அணி செயலாளர்எம் முகமது சரீப்,மாவட்ட செயலாளர் பாபு, தில்லை சரவணன்,மாவட்ட துணை செயலாளர் கலியமூர்த்தி     ( எ ) கபிலன்,காஜாமலை பகுதி செயலாளர்,உறையூர் பகுதி செயலாளர்துரைவளவன்,தென்னூர் பகுதி செயலாளர் சக்தி, ஜங்சன பகுதி செயலாளர் இரா.தினேஷ்,சமூக ஊடக செயலாளர் சால்விக், விடுதலை விக்கி மதன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.