புதுடெல்லி நவ.01 முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.இதுகுறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில் அவர் கூறப்பட் டுள்ளதாவது: பண்டிட்ஜியின் இந்து, பாபுவின் அன்புக்குரியவர், அச்சமற்றவர், துணிச்ச லானவர்,நீதியை விரும்புபவர் இந்தியாவின் இந்திரா!பாட்டி, தேசத்தின் ஒற்றுமை மற்றும்ஒருமைப் பாட்டிற்கான உங்கள் தியாகம், பொது சேவையின் பாதையில் நம் அனைவரையும் எப்போதும் ஊக்குவிக்கும் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்- ராகுல் காந்தி மரியாதை!






