நமச்சிவாய அருட்பணி மன்றம் 3000-வது திருவாசகம் முற்றோதுதல் விழா, 38 வது ஆண்டு நிறைவிழா, சான்றோர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது!

நமச்சிவாய அருட்பணி மன்றம் 3000-வது திருவாசகம் முற்றோதுதல் விழா, 38 வது ஆண்டு நிறைவிழா,சான்றோர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

 

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் 5 10 2025 அன்று காலை 7:00 மணி திருமுறை பாராயண ஊர்வலம், அருள் தரும் செண்பகவல்லி அம்மன் சமேத அருள்மிகு விக்ரம பாண்டீஸ்வர ஆலயத்தில் இருந்து புறப்பட்டு அருள்தரும் ஸ்ரீ பூமிநாத சுவாமி கோவிலில் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்திற்கு திருமதி புவனேஸ்வரி மற்றும் திருமதி பி சிவகாமி அவர்கள் முன்னிலை வகித்தனர்.

அருள் தரும் ஸ்ரீ பூமிநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் சைவப்பேரொளி நல்லாசிரியர் கோ.சிவஞானம் செயலாளர் தலைமையில், டாக்டர் பர்வதராணி முன்னிலையில் நடைபெற்றது. விழாவின் துவக்கத்தில் திருமதி எம் கல்யாணி, திருமதி ஆர் உமாராணி, திருமதி எம் பழனியம்மை குமார் இறைவணக்கம் பாடினர், புலவர் எஸ் பி ராமன் வரவேற்புரை ஆற்றினார், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநிலச் செயலாளர் பா பரமசிவன் விழா தொடக்க உரையாற்றினார், இரா மீனாட்சி சுந்தரம் ஆண்டறிக்கை வாசித்தார், தூத்துக்குடி டாக்டர். சிவ சு ஆறுமுகம் அஞ்சேல் என்பார் யார் ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் வழிபாட்டுக் குழு, செயலாளர் ரவி என்ற சண்முக வேலாயுதம் மற்றும் பூமிநாத சுவாமி கோவில் நிர்வாக அதிகாரி திருமதி மாடத்தி வாழ்த்துரை வழங்கினார்,

சான்றோர்களுக்கு பாராட்டு கேடயம் சால்வைகளையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது,பின்பு திருக்கைலலாய பரம்பரை திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம், பதினெட்டாவது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ சத்யஞான மஹாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அருளாசியுரை ஆற்றினார்.
நமச்சிவாய அருட்பணி மன்றம் விழா குழு மற்றும் துணைத் தலைவர் தெய்வத்தமிழ்மணி புலவர் கி முத்தையா, பொருளாளர் திருமதி இராமலெட்சுமி, செயலாளர் சைவப் பேரொளி கோ சிவஞானம் ஆகியோர் விழாக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர், இறுதியாக இணை செயலாளர் எஸ் கிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.