நாகர்கோவில் ஆக 29 குமரி கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் இராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட் பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி கழக நிர்வாகிகளுக்கு கழக பொதுச்செ யலாளர் கையொப்ப மிட்ட புதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் விழா இராஜாக்கமங்கலத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு குமரி கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் ஆர்.ஜே.கே.திலக் தலைமை வகித்தார். இராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றிய கழகச்செயலாளர் பொன்.சேகர் வரவேற்று பேசினார்.கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் அய்யப்பன்,நாகர்கோவில் பகுதி செயலாளர்கள் வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன்,ஸ்ரீலிஜா, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் கழகஅமைப்புச் செயலாளரும், குமரி கிழக்குமாவட்ட கழகச் செயலாளருமான என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ, கலந்துகொண்டு இராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட் பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி கழக நிர்வாகிகளுக்கு புதியஉறுப்பினர் உரிமைச்சீட்டுகளை வழங்கினார்.இவ்விழாவில் கழக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்குமாவட்ட கழகச் செயலாளருமான திரு.என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ, இராஜாக்கமங்கலம் ஊராட்சிஒன்றியக் குழுத் தலைவர் அய்யப்பன்,புத்தேரி ஊராட்சிபொறுப்பாளர் லெட்சுமணப்பிள்ளை,நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி செயலாளரும்,மாமன்ற உறுப்பினருமான ஸ்ரீலிஜா, மாவட்டபஞ்சாயத்து உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா ஆகியோரிடம் அந்தந்த பகுதிகளுக்கானபுதியஉறுப்பினர் உரிமைச்சீட்டுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுந்தரம்,மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள்பசாறை செயலாளர் அக்சய கண்ணன் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, கணபதிபுரம் பேரூர் கழகச் செயலாளர் விக்னேஷ்,கணிய குளம் ஊராட்சிமன்ற பொறுப்பாளர் சுந்தரமணி, இராஜாக்மங்கலம்ஊராட்சி பொறுப்பாளர் செல்வகுமார், எள்ளுவிளை ஊராட்சி பொறுப்பாளர் வெங்கட்ராம் உட்பட பலர் கலந்துக்பட பலர் கலந்துகொண்டனர்.இராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றியப ட பொருலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ,வழங்கினார்!






