சென்னை. ஆக.13 சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரிவளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலையும் முதல்அமைச்சர் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று(12.08.2024) தலைமைச் செயலகத்தில்,சட்டத்துறை சார்பில் இராமநாதபுரம் அரசுசட்டக் கல்லூரியில் 76கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்செலவில்
கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடம், திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூர், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிவளாகத்தில் 1கோடியே 57 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடல்ஆகியவற்றை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இராமநாத புரம்மாவட்டம், கீழக்கரைவட்ட ம் ,குதக்கோட்டை கிராமத்தில் 1,76,549 சதுர அடி பரப்பளவில் 76கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்செலவில் கட்டப்பட்டுள்ள இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இப்புதி ய கட்டடமானது,26 வகுப்பறைகள், கருத்தரங்குக்கூடம், காணொலிக்காட்சி அறை, உள்விளையாட்டு அரங்கம், சர்வதேச தரத்தில் மாதிரி நீதிமன்ற அரங்கம், நிர்வாகத் தொகுதிக் கட்டடங்கள், அதிவேகஇணைய வசதிகளுடன் கூடிய கம்பியில்லா மண்டலம்அடங்கிய நூலகக் கட்டடங்கள், டால்பிடிஜிட்டல் ஒலிப்பெருக்கியுடன் நவீனதொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கலையரங்கம், விடுதி காப்பாளர் அறை, 250மாணவியர்கள் தங்கும்வசதி கொண்ட விடுதிக் கட்டடம்,மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன 2022,2023 ஆண்டிற்கான சட்டத்துறை மானியக்கோரிக்கையில், திருவள்ளூர் மாவட்டம்,பட்டறைப்பெரும்புதூரில் உள்ள சென்னைடாக்டர் அம்பேத்கர்அரசு சட்டக் கல்லூரியில் விளையாட்டுத்திடல் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசுசட்டக் கல்லூரி வளாகத்தில் 1 கோடியே 57இலட்சத்து 70 ஆயிரம்ரூபாய் செலவில்அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடலை தமிழ்நாடு முதலமைச்சர்மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது






