கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே விவசாய மின் இணைப்பு வழங்க, விவசாயிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி மின்வாரிய ஊழியர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோயிஸ் விவசாயியான இவர் தனது விளைநிலத்திற்கு மின் இணைப்பு வழங்க, தாம்சனபள்ளி உள்ள துணை மின் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அப்போது அவரிடம் அங்கு பணியாற்றும் போர்மேன் அலி என்பவர் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டுமானால் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு மோயிஸ் 10 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார் தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி மோயிஸ் இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்து அதை மின் ஊழியர்களிடம் கொடுக்குமாறு கூறினர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போர் மேன் அலியிடம் அளிக்க வந்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக மின் ஊழியர் அலியை பிடித்து கைது செய்தனர் அதைத்தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






