இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: கரூர் சம்பவம் குறித்து விஜய் வேதனை!

சென்னை: கரூரில் நடந்த சம்பவத்தால் இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன் என்று விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.