வீரவநல்லூர்,
10.01.2026.
மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் இரா. ஆவுடையப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி,தலைமை செயற்குழு உறுப்பினர்
எங்களின் எதிர்காலம் ஆ.பிரபாகரன் அவர்களின் ஆலோசனையின்படி
சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு
வீரவநல்லூர் பேரூர் கழகம் சார்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் 07.01.2026 மாரத்தான் போட்டி, 08.01.2026 கபாடி போட்டி, 09.01.2026 கிரிக்கெட் போட்டிகள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு
வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் வீ.சுப்பையா தலைமை தாங்கினார்.
வீரவநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி. சித்ரா,மற்றும் துணை தலைவி வசந்த சந்திரா முன்னிலை வகித்தனர்.
நகர திமுக துணைச் செயலாளர் திரு. முத்துராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ், காங்கிரஸ் கவுன்சிலர் சிதம்பரம் கழக சாதனைகள் பற்றி பேசினார்கள்.
கழக செயற்குழு உறுப்பினர் ஆ. பிரபாகரன் திமுக ஆட்சியின் சாதனையை பேசினார். கபாடி, கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற முதல்வது மற்றும் இரண்டாவது வந்த அணிகளுக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது . இதில்
உள்ளாட்சி பிரதிநிதிகள்,பேரூர்கழக நிர்வாகிகள்,வார்டு கழக நிர்வாகிகள்,இளைஞரணி நிர்வாகிகள்,மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






