‘லோக்சபாவில் ஒலித்த பாரதியின் பாடல்: தமிழகத்துக்கு பெருமை’: பாரதியின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி பேட்டி

திருப்பூர்: ‘வந்தே மாதரம்’ பாடலை தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் பாரதியார். லோக்சபாவில்…

இரவு நேரத்தில் வாகன சோதனையில் போலீஸ்காரருக்கு நேர்ந்த சோகம்: காலையில் போன் செய்து குற்றவாளி வாக்குமூலம்!

சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் வாகன சோதனையில் கார் மோதி கான்ஸ்டபிள் மேகநாதன் உயிரிழந்த…

யுனெஸ்கோ கலாசார பட்டியலில் தீபாவளி பண்டிகை

புதுடில்லி: யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ  எனப்படும் ஐ . நா . , சபையின் கல்வி , அறிவியல் , கலாசார அமைப்பு , பாரம்பரிய சின்னத்தின் …

மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்

மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பத்தொன்பது பேர் பலி ; மீட்பு பணிகள் தீவிரம் ரபாடா : மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பத்தொன்பது பேர் உயிரிழந்தனர் . மீட்புப் பணிகள் தொடர்கின்றன. வடஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இரண்டு இடிந்து விழுந்தது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர் . இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர் . இந்த விபத்தில் பத்தொன்பது பேர் உயிரிழந்தனர் . மேலும் பதினாறு பேர் பலத்த காயமடைந்தனர் . இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது . இடிந்து விழுந்த இரண்டு கட்டடங்களில் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது . கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி பத்தொன்பது பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .