மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை நடத்தி வரும் சிஇ ஓஏ கல்விக் குழுமத்தின் நிறுவனர் முனைவர் இராசா கிளைமாக்சு ஓய்வு பெற்ற சுங்கதுறை அதிகாரி ஆவார்.
இவர் கணிதத்தில் அதிலும் குறிப்பாக வடிவியலில் (Geometry) பல புதிய தேற்றங்களைக் கண்டுபிடித்து உலக அளவில் கணித அறிஞர்களிடையே புகழ் பெற்று வருகிறார்.
மேலும், உலகக் கணிதக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (AIMER) என்ற அமைப்பு, இந்த ஆண்டு “ஏகலைவன்” என்னும் விருதினை வழங்கி, இவரைப் பெருமைப்படுத்தியது.
இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற உலகக் கணித மாநாட்டில் பங்கேற்ற அவர், அந்த மாநாட்டில் கண்டுபிடித்த “பன்னிரண்டு புள்ளி வட்டம் என்ற புதிய வடிவியல் தேற்றத்தை அறிஞர்கள் நடுவில் அரங்கேற்றினார்.
இந்நிலையில் மதுரை திரும்பிய
இராசா கிளைமாக்சு,
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
1822 ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோயர்பாக் (Feuerbach) $168.
முக்கோணத்தில் உள்ள 6 முக்கியப் புள்ளிகள் வழியாக ஒரு வட்டம் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்தார் அதற்கு “6 புள்ளி வட்டம்” என்று பெயரிட்டார் என்றார்.
அதன்பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர்லி டெர்க்கெம் என்பவர் மேற்கூறிய 6 புள்ளி வட்டம்: ஒரு முக்கோணத்தில் மேலும் கூடுதலாக 3 முக்கியப் புள்ளிகள் வழியாகச் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்தார் எனவே அதற்கு 9 புள்ளி வட்டம்” என்று பெயரிட்டார்.
தற்போது சுமார் 200 ஆண்டுகள் கழித்து தமிழராகிய நான், அந்த வட்டம் ஒரு முக்கோணத்தில் மேலும் கூடுதலாக 3 புள்ளிகள் வழியாகச் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்து, அவ்வட்டத்திற்கு 12 புள்ளி வட்டம் எனப் பெயரிட்டுள்ளேன் என்றார்.
இந்த புதிய கண்டுபிடிப்பை இத்தாலியில் நடைபெற்ற கணித மாநாட்டில் உலக்க் கணிதமேதைகள் நடுவில் எடுத்துரைத்தேன் என்றும் மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.
இராசா கிளைமாக்சுக்கு ஆசிரிய பெருமக்கள், கல்வியாளர்கள் என ஏராளமானோர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பாலகிருஷ்ணன்
மதுரை மாவட்ட செய்தியாளர்






