பெற்ற குழந்தையை கொலை செய்த வழக்கு! அதிரடி தீர்ப்பு !!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த விஜய் (30) என்பவர் சென்னையில் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

விஜய் அபிராமி என்ற மனைவியும் விஜய் ( 7 )என்ற மகனும் கார்னியா (4) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்து வந்த மீனாட்சிசுந்தரம் என்பவரிடம் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டது.ஏற்கனவே, வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்கள் பதிவிட்டு பிரபலமான இருந்த அபிராமி, குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு, காதலனுடன் தப்பிசென்றார்.

கேரளா தப்பி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் தலைமறைவாக இருந்த அபிராமி மீனாட்சி சுந்தரம் ஆகியோ நாகர்கோவிலில் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர் இந்த வழக்கில் விசாரணை காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது அரசு வழக்கறிஞர் சசிரேகா இவ் வழக்கில் ஆஜராகி வாதாடினார் இறுதி வாதங்கள் நிறைவு பெற்ற இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இருவரும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு இருவருக்கும் சாகும் வரை சிறையில் இருந்தே தண்டனை அனுபவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்டம் முதன்மை நீதிபதி ப.உ. செம்மல் தீர்ப்பு வழங்கினார்