போலி உரம் விற்பனை மூன்று பேர் கைது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுராந்தகநல்லூர் கிராமத்தில் விவசாயிகளிடம் டாடா ஏஸ் வாகனத்தில் 24 மூட்டைகளுக்கு மேல் போலி உரத்தை எடுத்து வந்து ஒரு மூட்டை உரம் 1200 ரூபாய் என்ற விலையில்
விற்பனை செய்து பணத்தை பெற முயற்சித்த நபர் மீது சந்தேகம் அடைந்த விவசாயிகள்
ஒரத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது போலீசார் போலி உரம் விற்பனை செய்த நபர் மற்றும் 24 மூட்டை போலி உரங்களை காவல் நிலையம் எடுத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த கந்த பிரபு, இவர் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் பகுதியை சேர்ந்த மகேஷுடன் சேர்ந்து மதுரையில் பிரபல உரம் நிறுவனங்களின் பெயரில் சாக்குகள் தயார் செய்து பின்னர்
விருத்தாசலம் வயலூர் பகுதியை சேர்ந்த விஜயரங்கன் மற்றும் பெரிய கண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த பச்சைமுத்து என்பவருடன் இணைந்து
போலி உரத்தினை தயார் செய்து விற்பனை செய்ததாக போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 24 மூட்டைகள் போலி உரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






