இன்று 5.12.2024 வியாழக்கிழமை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைத்துள்ள அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சேரன்மகாதேவி அ.இ.அ.தி.மு. கழகத்தின் நகர செயலாளர் வழக்கறிஞர் C. பழனி குமார் தலைமையில், சிறப்பு அழைப்பாளர் ஒன்றிய கழகச் செயலாளர் மாரி செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குனியூர் மாடசாமி,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் இசக்கி பாண்டியன் ஆகியோர் முன்னிலையில்,
முன்னாள் நகரம் ஐசக் பாண்டியன், முன்னாள் ஒன்றிய இணைச் செயலாளர் பன்னீர்செல்வன், முன்னாள் நகரம் சௌந்தர்ராஜன்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் உச்சி மாகாளி, கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார்,நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வகுமார், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மகாராஜன், மாவட்ட பேச்சாளர் சவுண்ட் சரவணன்,கிருஷ்ணன், அமர்சிங், பாலச்சந்திரன், முருகையா பாண்டியன், இசக்கிமுத்து,செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி!நகர செயலாளர் வழக்கறிஞர் C. பழனி குமார் தலைமையில்அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி!!






