பறக்கை சிலிண்டர் வாயு கசிவு விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் முத்து,இவரது வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சீதாராமன், முத்து, சுமதி உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர்.

அவர்களில் சீதாராமன், முத்து ஆகிய இரண்டு பேரும் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில் முத்துவின் மனைவி சுமதி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதனால் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சோகத்தில் உள்ளனர்