கண்ணாடியின் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சேரன் கோவில் பத்து கிராம இடங்களில் கல்குவாரி அமைக்க தடை கோரிமனு!

கண்ணாடியின் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சேரன் கோவில் பத்து கிராம இடங்களில் கல்குவாரி அமைக்க கண்டனம்

திருநெல்வேலி மாவட்டம் சேரன் கோவில் பத்து கிராம சர்வே எண் 76/276/1சி ஆ

கிய இடங்களில் குவாரி அமைத்து சரல் மண் மற்றும் கல் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் கல் எடுப்பதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் பல பாதிப்புகள் இப்பகுதியில் ஏற்படும் என தெரிகிறது அதாவது வல்லுனர்களால் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இப்பகுதி உள்ளதாக அறிவித்துள்ளனர் இயற்கை வளங்கள் அளிக்கும் பட்சத்தில் மழை அளவு பாதிக்கும் நிலத்தடி நீர்மட்டம் குறையும் விவசாய நிலங்கள் பாதிப்படையும் மேற்கண்ட பகுதியில் பெய்யும் மழையால் எங்கள் பகுதி செழிப்பாக இருப்பதால் இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இப்பகுதி வறண்ட பூமியாக மாறும் எனவே மேற்கண்ட இடத்தில் குவாரி அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது அனுமதி அளிக்கும் பட்சத்தில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்குவோம் என்பதை தெரிவித்து வட்டாட்சியர் அவர்களிடம்கண்ணடியன் கால்வாய் விவசாய சங்கதலைவர் பாவநாசம் செயலாளர் கண்ணப்பன் பொருளாளர் ரத்தினம் மனு அளித்தனர்.