“இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 42% பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள்” அமைச்சர் உதயநிதி

புதுச்­சேரி:இந்­தி­யா­வி­லேயே தமி­ழ­கத்­தில் தான் பணிக்­குச்செல்­லும் பெண்­கள் 42% ஆக உள்­ளனர் என்று அமைச்­சர் உத­ய­நிதிஸ்டாலின் தெரி­வித்­தார்.கட­லூர் திமுக கவுன்­சி­லர் சரத் – நிவே­திதா இணை­யர் திரு­ம­ணம்புதுச்­சேரி­யில் இன்று(ஆக.30) நடந்­தது. இத்­தி­ரு­ம­ணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து திமுக இளை­ஞ­ர­ணிச்செய­லாள­ரும், தமி­ழக அமைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் பேசி­ய­தாவது: திமு­க­வின் முதல் பொரு­ளாள­ரின் கொள்­ளுப்­பே­ர­னின் திரு­ம­ணம் இது.ஒரு காலத்­தில் மக­ளிர் வீட்டை விட்டு வெளியே வரக்­கூடஉரி­மையில்லை. அவர்­க­ளுக்கு படிக்­க­வும் வாய்ப்பு தரப்­ப­ட­வில்லை.இந்தநிலையை மாற்றி மாற்றத்தை கொண்டு வந்­தது திரா­விடஇயக்­கம் திமுகதான்.மக­ளி­ருக்கு சொத்­தில் சம­வு­ரிமை என இந்­தி­யாவி­லேயே முத­லில் சட்­டம் கொண்டு வந்­த­வர் கரு­ணா­நி­தி­தான். தற்போது மக­ளிர் கட்­டண­மில்­லா­மல் பேருந்தில் பய­ணிக்­க­லாம் எனதிட்­டம் கொண்டு வந்­ததன் மூலம் கடந்த 3ஆண்­டு­க­ளில் 520 கோடி முறைமக­ளிர் பய­ணம்செய்­துள்­ளனர். இத­னால் மாதம்ஆயி­ரம் ரூபாய் வரை தமி­ழ­கத்­தில் மக­ளிர் சேமிக்கின்­றனர்.பலதிட்­டங்­களால் உயர்கல்­வி­யில் சேரு­வோர் எண்­ணிக்கை தமி­ழ­கத்­தில் அதி­க­ரித்து வரு­கி­றது.காலை உண­வுத்திட்­டத்­தில் 20 லட்­சம்மாண­வர்­கள் தின­மும்பயன்­ பெ­று ­கின்­ற னர் .கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம் தொடங்­கிய ஓராண்­டில 1.16 கோடி பெண்­கள் மாதம் ஆயி­ரம் ரூபாய் பெறு­கின்­றனர். இந்­தி­யாவி­லேயே தமி­ழ­கத்­தில் தான் பணிக்­குச்செல்­லும பெண்­கள் 42 சத­வீ­த­மா­க­வுள்­ளனர். மண­மக்­கள் ஒரு­வ­ரை யொரு­வர் புரிந்து கொண்டு ஒரு­வர் மற்­ற­வரை சுயம­ரி­ய ாதை­யு­டன் நடத்த வேண்­டும். பிறக்கும் குழந்­தைக்கு நல்ல தமிழ் பெயரை வையுங்கள்.இவ்­வாறு அவர் பேசி­னார்.இந்­நி­கழ்­வில் திரா­வி­டர்கழ­கத்­தலைவர் வீர­மணி,விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சித்தலை­வர் தொல்.திரு­மா­வ­ள­வன்,அமைச்­சர்­கள் பொன்முடி,எம்.ஆர்.கேபன்னீர்­செல்­வம், கணேசன்,புதுச்­சேரி எதிர்க்­கட்­சித்தலை­வர் சிவா உள்­ளிட்­டோர் பங்­கேற்­றனர்.