சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை மருத்துவர் சாந்தி சுசீந்திரன் பாராட்டு – மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கினார்

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை மருத்துவர் சாந்தி சுசீந்திரன் பாராட்டு – மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கினார்
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் சாந்தி சுசீந்திரன் அவர்கள் குடும்ப நலத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் அவர்களால் பாராட்டப்பட்டார்.
2024–2025 ஆம் ஆண்டில் தாய் மற்றும் குழந்தை நல சேவைகள், பாதுகாப்பான பிரசவ சேவைகள், கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் டாக்டர் சாந்தி சுசீந்திரன் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்துள்ளார். அவரது சிறந்த பணியை பாராட்டும் விதமாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் அவர்கள் இன்று கேடயம் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவர் சாந்தி சுசீந்திரனை வாழ்த்தினர். மேலும், அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவையால் பயனடைந்த பொதுமக்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
அரசு மருத்துவ சேவையை மக்களிடம் நம்பிக்கையுடன் கொண்டு செல்லும் வகையில் டாக்டர் சாந்தி சுசீந்திரன் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.