கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும்!பயணிகள் கோரிக்கை!

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும்!பயணிகள் கோரிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டும் ஒரு நிலையமாகத் திகழ்கிறது.இந்த ரயில் நிலையத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்பது குறித்து,
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் கவிஞர் உமர் பாரூக் கூறியதாவது, “கல்லிடைக்குறிச்சியிலிருந்து தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஏறி இறங்குகின்றனர்.
வருடத்திற்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை ரயில்வேத்துறைக்கு வருவாய் கிடைக்கிறது.ஆனால்
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நவீன முறையில் கட்டப்பட்ட கழிவறை மற்றும் பயணியர் தங்கும் அறை போன்றவை இன்று வரை திறக்கப்படவில்லை.மேலும் நடைமேடை பகுதி முழுவதும் கரடு முரடாகக் காட்சியளிக்கிறது.இதை சீர்செய்து,இந்த நடைமேடை

யை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிப்பு செய்யவேண்டும். ஏற்கனவே மூன்று தண்டவாளங்களைக் கொண்ட இந்த ரயில் நிலையத்தில் தற்போது ஒரேயொரு தண்டவாளம் மட்டுமே உள்ளது.எனவே இரண்டாவது தண்டவாளம் ஒன்றை அமைக்க வேண்டும்.அனைத்து வசதி களையும் கொண்ட பிளாக் ஸ்டேஷன் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். கல்லிடைக்குறிச்சி ரயில்

நிலையத்தில்மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களைப் போல பாலக்காடு -தூத்துக்குடி செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் தர வேண்டும்.”என்று கூறினார்.

நகர தேமுதிக நகர செயலாளர் நாலாயிரம் முத்து மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.எம். அப்துல் சமது, நிர்வாகி இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர்.