புதுடெல்லி , செப்.13.மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய
பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாசபிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு
முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால்,செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில்,
சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.கடந்த 23 நாட்களாகசிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சீதாரம் யெச்சூரிமாநிலங்களவை உறுப்பி
னராக இருந்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக சீதாராம் யெச்சூரி உயிரிழப்பு






