சென்னை: தவெகவுக்கு ஆதரவா என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்கு விசிக ஆலோசனை நடத்தவுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ‘எந்த முடிவாக இருந்தாலும் கட்சியின் தலைவர் என்ற முறையில் எடுக்க எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியாமல் நானே முடிவு எடுக்க முடியும். தவெக ஆட்சியமைக்க எந்த விதத்திலும் இடையூறாக இருக்க மாட்டோம் என மு.க.ஸ்டாலின் எங்களிடம் கூறினார். மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என மு.க.ஸ்டாலின் எங்களிடம் கூறியுள்ளார்’ எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து நாளை காலை விசிகவின் முடிவு அறிவிக்கப்படும்: திருமாவளவன்






