18.08.25 அன்று
தர்மபுரி மாவட்டம் அரூர் நகரில் இயங்கி வரும் வரலாற்று சிறப்புமிக்க அண்ணல் அம்பேத்கர் அறிவகம் அறக்கட்டளையில் எழுச்சித் தமிழர் பிறந்த நாள் விழா மற்றும் TNPSC போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
அறிவகத்தின் TNPSC தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை யேற்றார். நான் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி , கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கினேன்.அண்ணல் அம்பேத்கர் அறிவகத்தின் மிகப்பெரிய இலட்சியங்களில் ஒன்றான அனைத்து சமூகத்தை சார்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக TNPSC பயிற்சி வழங்கி அரசு வேலை வாய்ப்பை உருவாக்குவது என்கிற திட்டதை நிறைவேற்றுகிற வகையில்,எந்த பிரதிப்
பலனும் எதிர் பார்க்காமல், அயராதுஉழைத்து வருகிற ஆசிரியப் பெரு மக்களுக்கு மனதார வாழ்த்து கூறி எனது உரையை நிறைவு செய்தேன்.நிகழ்வில் தலைமை பயிற்சி ஆசிரியர் சக்திவேல் ,கவிஞர் ஆதிமுதல்வன், விஜயன் BRT, அம்பேத் வேடி, கோகுல் மற்றும் வாழ்த்துரை வழங்க மு. சிவராமன் இயக்குனர்,
சி. சேகர் DEO ஓய்வு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
செய்திப் பகிர்வு:
உரைவாள் எ.கொ.அம்பேத்கார் ,
MSC.M.Phil.,B.Ed.,MA,MA,PhD..
சமூகச் செயற்பாட்டாளர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம்.






