வீரவநல்லூர், அக். 9.
நெல்லை அருகே பஸ்சும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் நடத்துனர் பலியானார் இரண்டு டிரைவர்கள் சிரிய ஸரக உள்ள நிலையில் பஸ் சில பயணம் செய்த குழ தைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்
நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து பாபநா சம் தோக்கி நேற்று காலை 10.30 மணியளவில் வள்ளி யூர் பணிமனை கட்டுப் பாட்டில் உள்ள பாயின்ட டூ பாயின்ட அரசு பஸ் சென்று கொண்டிருந்தது பஸ்சில் 50க்கும் மேற்பட் டோர் பயணம் செய்தனர். கன்னியாகுமரிமாவட்டம் பழவூர் பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் அருண் (56) என்பவர் பஸ்சை ஓட் டிச்சென்றார் நடத்துநராக கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம், கொடு மூட்டி பகுதியை சேர்ந்த அஜித் மெல்வின் ஆர்தர் (50) பணியில் இருந்தார்.
கோபாலசமுத்திரத்தை அடுத்த சுப்பிரமணியபுரம் இலங்கை அகதிகள் முகாம் அருகே திருப்பு முனையில் பஸ் சென்ற போது எதிரே நெல்லை நோக்கி வந்த டிப்பர் லாரியும், அரசு பஸ் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மாதியது இதில் இரண்டு
வாகனங்களின் முன்பகு தியும் நொறுங்கி பலத்த சேதமடைந்தது. இதைய டுத்து அரசு பஸ்சில் இருந்த பயணிகள் வலி தாங்கமுடி யாமல் அலறித்துடித்தனர். குழந்தைகளும் அச்சத்தில் அழுது கூச்சலிட்டனர்
தகவலறிந்ததும். சேரன் மகாதேவி தீய ணைப்பு நிலைய அலுவலர் சூசை மரியபாலன் தலை மையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்துவந்து அப் பகுதி பொதுமக்கள் உத வியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத் தில் அரசு பேருந்து நடத்து நர் அஜித் மெல்வின் ஆர் தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீவைகுண்டம். கருங் குளம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வம் (46), பஸ் டிரைவர் அருண்,குழந்தைகள், பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர் அவர்களை மீட்டுநெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் டிரைவர்கள் செல்வம். அருண் ஆகி யோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் சேரன்மகா தேவிசப்-கலெக்டர் ஆயுஷ் குப்தா சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் அண்டோ ஆரோக்கியராஜ் மேல செவல் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் பஸ் சும், லாரியும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் நேற்று மதியம் 2 மணிக்கு பிறகே அப்பகு தியில் போக்குவரத்து சீரா னது இதுகுறித்து மேலச் செவல் போலீசார் விசா ரணைநடத்தி வருகின்றனர்.
முன் இருக்கையில் அமர்ந்ததால் நடத்துனர் பலியான சோகம்

அரசு பேருந்து, பேருந்துகளில் நடத்து ர்களுக்கு பஸ்சின் பின் புறத்தில் தான் இருக்கை ஒதுக் கப்பட்டுள்ளது. டிக்கெட் போட்ட பிறகு நடத்துனர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பின் இருக்கையில் தான் அமருவார்கள். சாதாரண பேருந்துகள் என்றால் பாபநாசம் செல்லும் வரை டிக்கெட் போட வேண்டியிருக்கும். இதனால் நடத்துனர்கள் பெரும்பாலும் அமர மாட்டார்கள். ஆனால் பாயிண்ட்டு பாயிண்ட் பேருந்தில் மேலப்பாளையம் வரை மட்டுமே பயணிகள் ஏற்றப்படுவர். அதன்பிறகு டிக்கெட் போட்ட நடத்துனர்கள் பின்புற இருக்கையில் அமர்ந்து கொள் வார்கள். நடத்துனர் அஜித் மெல்வின் ஆர்தரும் எப்போதும் பின் இருக்கையில் தான் அமர்ந்து இருப்பார். ஆனால் நேற்று விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் முன் இருக்கைக்கு வந்துள்ளார். அப்போது தான் இந்த கோர விபத்து நடந் துள்ளது. இதில் தான் அவர் பலியானார்.






