செல்போன் மற்றும் பணத்தை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த கேஸ் ஏஜென்சி ஊழியர்

கீழே கிடந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ₹670 பணம்

நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த கேஸ் ஏஜென்சி ஊழியர்

வீரவநல்லூர், செப்.30:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் கீழே கிடந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.670 ரொக்கப் பணத்தை கண்டெடுத்த கேஸ் ஏஜென்சி ஊழியர், அதனை உரியவரிடம் ஒப்படைத்து நேர்மையை வெளிப்படுத்தினார்.

வீரவநல்லூரில் இயங்கி வரும்  பாரத் கேஸ் ஏஜென்சியில் பணியாற்றி வரும் சொரிமுத்து என்பவர், வீரவநல்லூர் புறவழிச்சாலையில் விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.670 ரொக்கப் பணம் கீழே கிடப்பதை கண்டெடுத்தார். இதையடுத்து, அவற்றை உரியவரிடம் சேர்க்கும் நோக்கில் சொரிமுத்து தனது வசம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து விசாரித்ததில், கீழே கிடந்த செல்போன் மற்றும் பணம் பத்தமடையைச் சேர்ந்த G. வெள்ளபாண்டியன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்போன் மற்றும் ரூ.670 பணம் வெள்ளபாண்டியனிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டது.

தனது செல்போன் மற்றும் பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்ட வெள்ளபாண்டியன், அவற்றை நேர்மையுடன் கண்டெடுத்து ஒப்படைத்த சொரிமுத்து, கேஸ் ஸ்டவ் மெக்கானிக் சிக்கந்தர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்–மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட துணைத் தலைவர் வீரை P. நவாஸ் ஷரீப் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

கீழே கிடந்த பொருளை தங்களுடையது என எடுத்துக்கொள்ளாமல், உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட சொரிமுத்துவின் நேர்மை மற்றும் மனிதநேய செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.