திலீபன் நினைவு நாளில் வீரவணக்கம்
சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் மலரஞ்சலி
சென்னை, செப்.26:
சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில், தியாகத்தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாள் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் திலீபனின் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகத்தை முன்னிறுத்தியவராக திலீபன் நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், அவரது நினைவு நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி பொருளாளர் எஸ் எஸ் பாலாஜி, பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் பெ. வேல்முருகன், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் கக்கன் செல்வகுமார், கெங்கவல்லி மாவட்டப் பொருளாளர் தலைவாசல் முருகேசன், ஏற்காடு மாவட்டப் பொருளாளர் சேலம் சிறுத்தை சீனிவாசன், மாவட்டத் துணைச் செயலாளர் நேசத்தமிழன், அயோத்தியாபட்டணம் ஒன்றியச் செயலாளர் வே.சு. மணியன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திலீபனின் நினைவைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவரது தியாகத்தையும் போராட்ட வரலாற்றையும் நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.
திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
— பெ. வேல்முருகன்,
மாவட்டச் செயலாளர், ஏற்காடு சட்டமன்றத் தொகுதி,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சேலம் மாவட்டம்.






