கிராம நிர்வாக உதவியாளர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வட்டாட்சியர்

அலுவலகம் முன்பு கருப்பு பேட்ச் அணிந்து நூதன முறையில் போராட்டம், மற்றொரு சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.
தமிழக முழுவதும் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கத்தினர் வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ச் அணிந்து ஒரு சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மற்றொரு சங்கத்தை சேர்ந்த சுமார் 25 கிராம நிர்வாக உதவியாளர்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் பெண்கள் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
சிதம்பரம்.செய்தியாளர்.
வீ.இளமாறன்.






