அம்பை கல்லூரியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

அம்பை கல்லூரியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
அம்பாசமுத்திரம், செப். 23:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அம்பைக் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு விதைப்பந்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கலந்து கொண்டு, ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவ, மாணவியர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் முறைகள் மற்றும் அவற்றை இயற்கை வளம் பெருக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் எவ்வாறு வீசுவது என்பது குறித்து துறைவாரியாக விளக்கமளித்தார்.
மேலும், விதைப்பந்துகள் மூலம் மரங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சியை அதிகரித்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அம்பை காந்தி உடனிருந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் முத்துக்குமார், டாக்டர் சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.