57வது கல்கி ஜெயந்தி விழா 15ம் தேதி துவங்குகிறது

57வது கல்கி ஜெயந்தி விழா 15ம் தேதி துவங்குகிறது

முக்கூடல்,

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள ஓடைமறிச்சான் சத்திய நகரம் பகுதியில் அமைந்துள்ள மனுஜோதி ஆசிரமத்தில் 57வது கல்வி ஜெயந்திவிழா வருகிற 15-ம் தேதி துவங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது

கடவுள் ஒருவரே என்னும் கருத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் 57வது கல்வி ஜெயந்தி விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த மனுஜோதி ஆசிரம பக்தர்களும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொள்கிறார்கள்.

விழாவில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மண்டலம் மண்டலமாக உணவு சமைத்தல், தேசிய ஒருமைப்பாட்டு நாள் கூட்டம், பல் சமய மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

விழா நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகவாதிகள்,
பொதுமக்கள் என
ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

57வது கல்கி ஜெயந்தி விழா ஏற்பாடுகளை மனுஜோதி ஆசிரம தலைவர் பால் உப்பாஸ், லியோ பால் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.