மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தொடரும் அன்னதானம் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு உணவு வழங்கும் தமிழக வெற்றி கழகம்

சேரன்மகாதேவி, ஜூன் 16:

‎ஜூன் 22-ஆம் தேதி பிறந்தநாள் காணவுள்ள தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள்
மாதத்தை முன்னிட்டு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தொடர் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

‎கழகத்தின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படியும், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல்
மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மரிய வில்சன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் எச். ஜாகிர் உசேன் தலைமையில் கடந்த
ஜூன் 4-ஆம் தேதி சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

‎பிறந்தநாள் மாதத்தை முன்னிட்டு ஜூன் 4 முதல் ஜூன் 22 வரை தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக
ஜூன் 14, ( 11வது நாள் ) சேரன்மகாதேவி நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் சேரை பி. மாரியப்பன் அவர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக சேரை நகரச் செயலாளர் இஸ்மாயில், மணிகண்டன், Er.பிரபு, ஜென் 5 எட்வின், அறிவு பவுண்டேஷன் மைக்கேல், ராஜேஷ்
மற்றும் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.

‎நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்று சென்றனர்.
முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்த தொடர் அன்னதான திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

‎இந்த அன்னதானதை 4.6.2026 முதல் 22.6.2026 வரை திரு சேரை பி.மாரியப்பன் அவர்களால் வழங்கப்படுகிறது