கல்லூர் வழித்துணை முருகன் கோயிலில் 31ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா கோலாகலம்

கல்லூர் வழித்துணை முருகன் கோயிலில் 31ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா கோலாகலம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கல்லூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ வழித்துணை முருகன் கோயிலில் 31ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

இந்த கோயிலை கல்லூரைச் சேர்ந்த குருசாமி முத்துசாமி நிறுவி, பக்தர்கள் அனைவருக்கும் இறை அருள் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார். கோயிலில் தினமும் அண்ணதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய திருவிழாக்களான தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆண்டுதோறும் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற 31ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா முத்துசாமி தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.
விழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து, பால்குடம் ஏந்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தி முழங்கிய சூழலில் நடைபெற்ற இந்த விழாவில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது.
இவ்விழா பக்தர்களின் பெரும் திரளுடன் ஆன்மிக உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நிறைவுற்றது.