14 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழாவானது சிறப்பாக நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், அருள்மிகு பேட்ராயசாமி திருக்கோயிலில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் திரு.சீனிவாசன் ( DMK நகரச் செயலாளர்) அவர்களின் தலைமையில் 14 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழாவானது சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் காவல் உதவி ஆய்வாளர் திரு.நாகராஜன் , டாக்டர் திரு ராஜேஷ்குமார் (BMO) கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை சரக ஆய்வாளர் வேல்ராஜ், அஞ்செட்டி ஆய்வாளர் அருள்மணி , ஊர் பொதுமக்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்ற விவரம் பணிந்து தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.