புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள்!

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள்

திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 80வது ஆண்டு நினைவு நாளில் நெல்லை மாவட்டம், களக்காட்டில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவ படத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் A.K.நெல்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் மாவட்ட பொருளாளர் முகமது காஸிர், களக்காடு ஒன்றிய செயலாளர் சதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் இரட்டைமலை சீனிவாசன் படத்தை திறந்து வைத்தார் புரட்சி பாரதம் கட்சியின் களக்காடு நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் முத்துராமலிங்கம்,முத்துச்செல்வன், பாண்டி,சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.