சேரன்மகாதேவி, மாவடி தெருவில் அமைந்திருக்கும் அருள் மிகு ஸ்ரீ அரவலமாடன் சாமி , மற்றும் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் வீற்றிருக்கும் திருக்கோவிலில் இன்று வரலட்சுமி விரத சிறப்பு பூஜை சிறப்பாக நடைப்பெற்றது

சேரன்மகாதேவி, மாவடி தெருவில் அமைந்திருக்கும் அருள் மிகு ஸ்ரீ அரவலமாடன் சாமி , மற்றும் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் வீற்றிருக்கும் திருக்கோவிலில் இன்று வரலட்சுமி விரத சிறப்பு பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. இந்த சிறப்பு பூஜையில் டாக்டர் புனிதவதி கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுமங்கலிகளுக்கு மாங்கல்யம், குங்குமம் வழங்கினார்கள். மேலும் டாக்டர் புனித வதி கணேசன் அவர்கள் மகன் டாக்டர் மது கார்த்திஷ் ரூபாய் 7000 – மதிப்பிலான பீரோ ஒன்றை கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தார்கள். மாவடி தெரு, பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து விழாவினை சிறப்பித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.