புவனேஷ்வர், ஜூன்.30 – பூரிஜெகன்நாதர் கோவிலில் நேற்று ரதயாத்திரை நடந்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள் பட 3 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10பேர் படுகாய மடைந்தனர்.பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என்று தெரிந்தும் போதிய ஏற்பாடுகளை போலீசார் செய்யவில்லை என்று அங்கிருந்த பக்தர்கள் குற்றம் சாட்டினர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால்,பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில், ஆண்டு தோறும் ரதயாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ரத யாத்திரையில் ஒடிசா மக்கள் மட்டும் இன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் செல்வதை காண முடியும். இந்த நிலையில் தான், ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெற்ற ரதயாத்திரை-யின் போது ஏற்பட்ட நேரிசலில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும்10 பேர் காயமடைந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயரசம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெகன்நாதர்கோயில் அருகே உள்ள ஸ்ரீகுண்டிகா கோயிலில் ரதங்கள் சென்று கொண்டிருந்த போது இந்த துயரசம்பவம் நிகழ்ந்துள்ளது. ரதங்கள் குண்டிகா கோயிலை நெருங்கிய போது, தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதில் சிலர் கீழே விழுந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டு நெரிசல் உண்டாகி யுள்ளது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந் தனர். உயிரிழந்தவர்களில் பிரபாதி தாஸ், பசந்தி சாஹு ஆகிய இரண்டு பெண்களும்,70 வயதான பிரேமகாந்த் மொஹந்தி என்பவரும் அடங்குவர். இவர்கள் மூவரும் ஒடிசாவின் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ரதயாத் திரைக்காக பூரிக்கு வந்திருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என்று தெரிந்தும் போதிய ஏற்பாடு களை போலீசார் செய்யவில்லை என்று அங்கிருந்த பக்தர்கள் குற்றம் சாட்டினர் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக் கின்றன. இதனால்,பலி எண்ணிக் கை உயரும் என அஞ்சப்படுகிறது.
ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் பலி, பலர் படுகாயம்






