சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜை!

1.10.2025 – புதன் சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜை

நவராத்திரியின் 9 ஆவது நாள் கொண்டாடப்படும் மகா நவமி தினம் தான் சரஸ்வதிபூஜை தினமாகவும் ஆயுதபூஜை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டையும் தொழில் கூடத்தையும் மாவிலை தோரணங்கள் மற்றும் வாழை மரம் போன்ற மங்கலப் பொருட்களை கொண்டு அலங்காரம் செய்யுங்கள். பூஜை அன்று மாலை நேரத்தில், வீட்டுக் கருவிகள், தொழில் கருவிகள் மற்றும் உபயோகப்படுத்தும் வாகனங்களைக் கழுவி, சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், சந்தனம் வைக்க வேண்டும். நல்ல மலர்களை கொண்டு பூஜை அறையை அலங்கரியுங்கள். சுவாமி படங்களுக்கு முன்அனைத்து கருவிகளையும் அல்லது ஆயுதங்களையும் வைத்து வணங்குங்கள். தேவிக்குரிய ஸ்தோத்திரங்களை சொல்லுங்கள். பாடல்களைப் பாடுங்கள். இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்களையும் இதே வழிமுறையில் வணங்கலாம்.