திருச்சி : 16 09 2025
கட்சியில் இருந்து விலகியவர்களையும் மறைந்தவர்களையும் கட் பண்ண விரும்பவில்லை, என்று வைகோ தெரிவித்தார்
திருச்சி விமான நிலையத்தில் வைகோ பேட்டி: திருச்சியில் அதிமுக சார்பில் நடந்த அண்ணாதுரை பிறந்தநாள் விழா மாநாடு எதிர்பார்த்ததை விட பன்மடங்கு வெற்றியைப் பெற்று விட்டது.மாநாட்டின் போது சிறு அசம்பாவிதம் கூட இல்லை என்பதை போலீசார் பெருமையாக தெரிவித்தனர். கட்டுப்பாட்டு உணர்வோடும் கடமை உணர்வோடும் கட்சியினர் செயல்பட்டனர்.10 கிலோமீட்டர் தொலைவிற்கு கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.மாநாட்டில் உரையாற்றியவர்கள் யாரையும் புண்படுத்தாமல் தாக்கி பேசாமல், நோக்ககத்தையும் ஆக்கபூர்வமான அணுகுமுறைகளையும் பற்றி பேசினர். மதிமுக மறுக்க முடியாத தவிர்க்க முடியாத சக்தி என்பதையும் நிரூபித்து இருக்கிறது.பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா சக்திகளை வேரோடு வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவதற்கு திராவிட இயக்க தோழர்கள் முன்னணியில் நிற்க வேண்டும். திமுக தனிப்பெரும்பான்மை வெற்றிபெறும் என்பதை 2026 தேர்தல் நிருபிக்கும், என்று பேசினேன். அனைவரின் பாடுகளோடு இயற்கையும் ஒத்துழைத்ததால் இந்த மாநாடு எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே உணர்ச்சியோடு அனைவரும் கடமையாற்றுவார்கள் என்று நம்புகிறேன். என்னைப் பற்றிய காணொளி காட்சியில் கட்சியில் இருந்து விலகியவர்களையும் மறைந்தவர்களையும் கட் பண்ண விரும்பவில்லை. கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவர்களிடம்பேச விரும்பவில்லை. அவர்கள் வசைபாடினால் வாழ்க வசைவாளர்கள் என்றோம். கடசியில் பங்களித்த நிகழ்ச்சிகளை நான் தவிர்க்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






