ஆவணி கடைசி செவ்வாய்… முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு!

ஆவணி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
கரூர்,

ஆவணி மாத கடைசி செவ்வாய்க்கிழமையான இன்று கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புன்னம் சத்திரம் அருகே உள்ள பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால்,தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த பாலசுப்பிரமணியசுவாமியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில்உள்ள முருகன் கோவில்களில் ஆவணி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.