மதுரை
3-9-2025
தேர்தலில் போட்டிட்ட காரணத்திற்காக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபர் படுகொலையா மரணத்தில் சந்தேகம்
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பனிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த திருமங்கலம் அம்மாபட்டி ராமகிருஷ்ணன் அவர்கள் தொழிற்சங்க தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக படுகொலையா!
மரணத்தில் சந்தேகம் ? முறையான பிரேத பரிசோதனை செய்து கொலையா? தற்கொலையா? என்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.கொலை என்றால் உண்மையான குற்றவாளியை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முக்கிய சாலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் திரளாக கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தலைமை காளிமுத்து புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர்
வழக்கறிஞர் ரவிக்குமார், மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் ஊர்ச்சேரி சிந்தனை வளவன்,மோ எல்லாளன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்
பாலகிருஷ்ணன்
மதுரை மாவட்ட ஒளிப்பதிவாளர்






