சிதம்பரம் அருகே மின்சார தடையால் நான்கு ஊராட்சிகளுக்கு செல்லும் குடிநீர் செல்லவில்லை பொதுமக்கள் பெரும் அவதி சாலை மறியல் செய்வதாக மின்சார வாரியத்திடம் புகார்.
சிதம்பரம் அருகே உள்ளது
கனகரப்பட்டு. கீழப்பரம்பை. கீழத்திருகழிப்பாளை.
ஆகிய ஊராட்சிகள் அமைந்துள்ளது இந்த ஊராட்சிக்கான குடிநீர் மின் மோட்டார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நற்கவந்தன்குடி செல்லும் சாலையில்
அமைந்துள்ளது அதற்கென்று ட்ரான்ஸ்பார்ம் என்று சொல்லக்கூடிய மின்மாற்றி தனியாக உள்ளது எனவே இந்த மின்மாற்று ஆனது பழுதடைந்து இரண்டு நாட்கள் ஆகியும் அதனை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சரி செய்யவில்லை இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர் மனுவை ஏற்றுக் கொண்ட அதிகாரி உடனடியாக சரி செய்து தரவேண்டும் என்று ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் அதனை ஏற்று தலைவர்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்கள்.






