சேரன்மாதேவி
சேரன்மாதேவி கவின் கலைக்கழகத்தில் ஓவிய கண்காட்சி
சேரன்மாதேவி கவின் கலை கழகம் சார்பில், “சித்திர வீதி” மாபெரும் ஓவிய கண்காட்சி வருகின்ற 25.01.2026 அன்று நடைபெற உள்ளது.
சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஓவிய கண்காட்சியில், தேசிய வாக்காளர் தினம் மற்றும் நமது ஓட்டு நமது உரிமை என்ற தலைப்பில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையும், 9-ம் வகுப்பு 10-ம்வகுப்பு வரையும், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரையும் மற்றும் கல்லூரி மாணவர்கள் என நான்கு பிரிவுகளாக ஓவிய போட்டி நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் போட்டிகள் தொடங்குகிறது. தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். நிகழ்சி சப் கலெக்டர் ஆயூஷ் குப்தா முன்னிலையில் நடக்கிறது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மானவர்கள் பென்சில் மற்றும் வண்ணங்கள் கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசு தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும் என சேரன்மாதேவி சப் கலெக்டரும் கவின்கலைக்கழக தலைவருமான ஆயூஷ் குப்தா தெரிவித்துள்ளர்.






