விடுதலை சிறுத்தைகள் கட்சி சேரை நகரச் செயலாளர் சீ.முருகன் அவர்கள் இயற்கை எய்தினார்!
சேரன்மகாதேவி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சேரை நகரச் செயலாளர் சீ.முருகன் அவர்கள்(27.08.25) உடல் நலம் இன்றி மறைந்த செய்தி பெரும் துக்கத்தை அளிக்கிறது அதைத்தொடர்ந்து 28.08.25 சேரன்மகாதேவியில் உள்ள சுண்ணாம்புக்கல் தெருவில் அவர் வசித்து வரும் இல்லத்திற்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அவரது பூத உடலுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் மண்டல செயலாளர் ஞா.சுந்தர், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் M.C. சேகர், பாளை சட்டமன்ற தொகுதி செயலாளர் ரா.பாஸ்கர்,அரசியல் செயற்பாட்டாளர் முருகக் கண்ணா, சேரை ஒன்றிய செயலாளர் வே.மாதவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்டத் துணைச் செயலாளர் குமரேசன், அம்பை சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் அழகேசன், ஒன்றிய அமைப்பாளர் மாசாணம், வீரை நகர செயலாளர் சௌந்தர்ராஜன், பத்தமடை நகர செயலாளர் நடராஜன், பத்தமடை நகர துணைச் செயலாளர் வி சாமுவேல், பத்தமடை நகர துணைச் செயலாளர் SPN. கான்சா மைதீன், விகேபுரம் நகர துணை செயலாளர் அர்ஜுன், கோபாலசமுத்திரம் நகர துணை செயலாளர் பசுபதி மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்